நடிகை மீனாவின் கணவருக்கு அரிய வகை நோய்? திடீர் மரணத்திற்கு இதுதான் காரணம் : திரையுலகினர் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 8:29 am

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு கட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன், நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது. எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்யாசாகரின் நுரையீரலை சரி செய்ய தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். மேலும் புறா எச்சத்தால் அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?