ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் : முதலமைச்சரின் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 6:35 pm

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் : மாநில முதலமைச்சரின் அறிவிப்பு!!

புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500 என்றும், இரண்டுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச துணி வழங்கும் திட்டத்தின்கீழ் தொகை வழங்கப்படுகிறது என அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கூறிஉள்ளார்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியாகும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்