ஆந்திராவுக்கு தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : 12 கிலோ அரிசி பறிமுதல்.. ஒருவர் கைது…!

Author: Babu Lakshmanan
16 June 2022, 4:07 pm

திருவள்ளூர் அருகே லாரியில் ஆந்திராவிற்கு கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் இருந்து லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு
தமிழக அரசின் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கள் குற்ற புலனாய்வு போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 240 மூட்டையில் 12,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி
கடத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, செங்குன்றம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து அரசின் இலவச ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!