கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் ; ஆட்டோ ஓட்டுநர் கைது..!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 10:39 am

கோவை : கோவை போத்தனூர் அருகே கேரளாவிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் அருகே பொது விநியோக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வழங்கல் துறை மற்றும் குடிமைபொருள குற்றப்புலனாய்வு அதிகாரிகள் போத்தனூர் குருசாமிபிள்ளை வீதியில் ரோந்து சென்றனர்.

ration rice - updatenews360

அப்போது, அங்கிருந்த டாடா ஏஸ் ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் பொதுவிநியோக ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 2 டன் ரேசன் அரசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் சிவதாஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ration rice - updatenews360
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்