கரூரில் 63 மூட்டைகளில் சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல் – பதுக்கி வைத்திருந்த மணிகண்டன் என்பவரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கரூர் மாநகரில் இரு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் சென்ற இரு சக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் முத்து நகர் பகுதியில் ஜவுளி துணி உற்பத்தி செய்யும் நிறுவன பெயர் பலகை மாட்டப்பட்டுள்ள கடைக்குள் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அரிசி மூட்டைகளை கொண்டு சென்றனர். அப்போது, அவரை பின் தொடர்ந்து சென்ற பறக்கும் படையினர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிகளை கடத்திக் கொண்டு வந்து ஒன்று சேர்த்து வைத்து கனரக வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுக்கிறது. இதனையடுத்து, அங்கு 63 மூட்டைகளில் சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசிகளை பறிமுதல் செய்ததுடன், அந்த கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற இளைஞரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வட்டார வழங்கல் அலுவலர் மகேந்திரன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் செந்தில் குமார் கொண்ட பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
This website uses cookies.