சென்னை to ஆந்திராவுக்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல் : லாரியை மடக்கி பிடித்த போலீசார்.. 2 பேரை கைது செய்து அதிரடி..!!

Author: Babu Lakshmanan
18 March 2022, 9:42 am

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே தச்சூரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கவரைபேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாரியில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த சுகுமார் முருகன் ஓட்டுநர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை மாவட்ட குடிமை பொருள் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து திருவள்ளூர் வழியாக போலீசாரின் பல்வேறு சோதனைகளை கடந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி