திருடனுக்கு தேள் கொட்டிய கதை… 15 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்து… ஓட்டுநர் எஸ்கேப்..!!

Author: Babu Lakshmanan
14 October 2022, 6:05 pm

காஞ்சிபுரம் ; சோமங்கலம் அருகே சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட 15,000 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகள் முழுவதும் ஏரியில் விழுந்து சேதம் அடைந்துள்ளது.

தகவல் அறிந்து விரைந்து சென்ற சோமங்கலம் காவல்துறையினர் இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து எங்கே கடத்தப்படுகின்றது. யார் இந்த லாரியை ஒட்டி வந்தது..? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கண்ணில் மண்ணை தூவி விட்டு கடத்தி சென்ற ரேஷன் அரிசி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 563

    0

    0