மகளை வன்கொடுமை செய்த ரவி எங்க கட்சிக்காரர் இல்ல.. புரட்சி பாரதம் பெயரை தப்பா பயன்படுத்தாதீங்க : எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 7:00 pm

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தலையில் அடிபட்டதாக எழும்பூர் மருத்துவமனை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் சிறுமியை முழு பரிசோதனை செய்தபோது சிறுமியின் பாலின உறுப்பில் காயம் இருப்பதை கண்டறிந்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

உடனடியாக அவருடைய தந்தை ரவியை போலீசார் விசாரித்து பின்னர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரவி புரட்சி பாரத கட்சியின் (புதுச்சேரி) மாவட்ட தலைவர் என செய்தி வெளியானது.

ஆனால் அவர் 3 வருடத்திற்கு முன்னரே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்த காரணத்தால் கடந்த 2021ஆம் ஆண்டே புரட்சி பார கட்சியின் புதுச்சேரி மாநில தலைவராக இருந்த ரவியை நீக்கிவிட்டதாகவும், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவரின் பெயரை பயன்படுத்தும் ஊடகங்கள் புரட்சி பாரதம் கட்சியின் பெயரையும் பயன்படுத்துகின்றன.

இந்த குற்றத்தை செய்திருக்கும் ரவியுடன் புரட்சி பார கட்சியின் பெயரை தொடார்புபடுத்தி செய்திகள் வெளியிட வேண்டாம், தவறான தகவல்களை பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்ழுடும் என அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 226

    0

    0