கப்பு எங்க வாங்குனீங்க? கடையிலா? மேடையிலா? அண்ணாமலை மீது ஆர்.பி உதயகுமார் தாக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2024, 8:52 pm
கப்பு எங்க வாங்குனீங்க? கடையிலா? மேடையிலா? அண்ணாமலை மீது ஆர்.பி உதயகுமார் தாக்கு!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு, அதிமுக அம்மா பேரவை சார்பில் அம்மா கோவிலில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார் . அப்பொழுது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தியாகத்தை எடுத்துச் சொல்லி உள்ளார்.
தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் வாழ்ந்து இருந்தாலும், இந்த இருபெரும் தலைவரின் சிறப்புகளைத்தான் கூறுகிறார்கள். இது அதிமுக தொண்டர்களுக்கும் அந்த பெருமையை சாரும்.
மூன்று மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தின் ஜீவதார உரிமைக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார்கள். முதலமைச்சர் கண்மூடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கூட்டணிக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை காவு கொடுக்கிறார் என மக்கள் அச்சப்படுகின்றனர் என தெரிவித்தார்.
கடையில் வாங்கினதா என்ற விவாதம் நடைபெறுகிறது .மேடையில் கப்பு வாங்கினால் தான் தமிழக மக்கள் பாராட்டுவார்கள் .கடையில் கப்பு வாங்கினால் கௌரவம் இருக்காது. கடையில் கப்பு வாங்கிக் கொண்டு மேடையில் வாங்கிவிட்டதாக பாராட்டை எதிர்பார்க்கிறார் . அது மக்களிடத்தில் எடுபடாது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.