அதிமுக ஆலமரம்.. நாங்க இங்கதான் இருப்போம்.. அண்ணாமலையை Attack செய்த ஆர்பி உதயகுமார்..!

Author: Vignesh
31 May 2024, 5:18 pm

அதிமுக 2 கோடி தொண்டர்களால் உருவான ஆலமரம் அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதற்காக ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டி காட்டாமல் அதிமுகவை அழிக்க நினைக்கும் அண்ணாமலையை எதிர்த்து போராடவும் தயங்க மாட்டோம் என ஆர் பி உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி. குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் திருமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

தொண்டர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாழ்த்தி வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்றைக்கு தாறுமாறாக தமிழகத்தில் உயர்ந்திருக்கிற காய்கறி விலைகள் இன்றைக்கு தமிழகத்தில் 39.2 லட்சம் ஏக்கரில், பழங்கள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

r b udhayakumar annamalai

மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது… புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

ஆண்டுதோறும் 6.9 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி நடந்தாலும் கூட மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. ஆகவே ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலே இன்னும் நாம் கையேந்துகிற ஒரு நிலைமையிலே நாம் இருக்கின்றோம் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கொடுத்த போதும் மூன்று ஆண்டுகள் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்று சொல்கிறார்கள். ஆனால், அதை சரியக கையாளவில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

அது இப்போது காய்கறி விலைகள் உச்சத்தில் இருக்கிற காரணத்தினாலே அது இன்றைக்கு நிரூபணம் ஆகி இருக்கிறது. வாரம் தோறும் விவசாயிகளை நேரில் சந்திப்பது சாகுபடிக்கு தேவையான உதவிகளை வழங்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், காய்கறினுடைய உற்பத்தி அதிகரித்தது விலையும் கட்டுக்குள் இருந்தது.

இன்றைக்கு தற்போது அந்த நிலையை திமுக அரசு கையாளவில்லை. இது மட்டுமல்ல இன்றைக்கு காய்கறிகளை அள்ளி வாங்கி வந்த நிலை மாறி எண்ணி வாங்கக் கூடிய வகையில் இன்றைக்கு விலைவாசி விஷம் போல் ஏறி இருக்கிறது. ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்கிற திமுக அரசு பத்தாயிரம் ரூபாயை பறிக்கிறது. உரிமை மீட்பதில் தூங்கிக் கொண்டிருக்கிற அரசு விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு தூங்கிக் கொண்டிருக்கிற அரசு, சட்டம் ஒழுங்கு சீரழிவு இதையெல்லாம் எடப்பாடியார் எடுத்துக்காட்டிருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சி தலைவராக தினந்தோறும் அறிக்கை எப்படி இருக்கிறார். திமுக எழுந்திருப்பதாக தெரியவில்லை தட்டி எழுப்பினாலும் கூட அது இன்றைக்கு எழுந்து இருக்கக்கூடிய ஒரு நிலையிலேயே இல்லை எனக் கூறிய ஆர்பி உதயகுமார் ஜூன் 4க்கு பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்கே இருக்க போகிறது என்று வாய் கூசாமல் இன்றைக்கு ஒருவர் பேசிக் கொண்டே இருக்கின்றார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசினால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசாத நாளே இல்லை என்கிற ஒரு நிலையில், இருக்கிறது. 4ம் தேதிக்கு பிறகு அல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் இயக்கமாக இந்திய திருநாட்டில் அன்னைத் தமிழகத்தில் வெற்றி கொடி நாட்டும் என்பதை அண்ணாமலை அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு அதிமுக நிலை என்ன என 4ம்தேதிக்கு பிறகு தெரியும் என்று சொல்லுகிறார்கள்.

r b udhayakumar annamalai

மேலும் படிக்க: என்னடா சொல்றீங்க.. 200 மி.லி தாய்ப்பால் 700 ரூபாய்.. மெடிக்கல் ஷாப்பிற்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

அதிமுகவை பொறுத்தவரை மக்கள் சேவையே கழகத்தினுடைய ஒரே கொள்கையாக வைத்து செயலாற்றி வருகின்றோம். ஆகவே, இன்றைக்கு அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு நாளும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசுவது ஏறத்தாழ ரெண்டு கோடி தொண்டர்களும் மன வேதனை அடையும்வகையில், அணையப் போகும் விளக்கு பிரகாசமாக தான் எரியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அனைய போகும் விளக்கு அல்ல அதிமுகவை பொறுத்தவரை அணையா விளக்கு என்பது அன்னை தமிழக மக்களுக்கு தெரியும். தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிற கலங்கரை விளக்கு என்பதும் அண்ணாமலை அவர்களுக்கு வரலாறு தெரியாத காரணத்தினால் அவர்கள் இன்றைக்கு வரலாறை படித்து பேசுவதை காட்டிலும் குறிப்பெடுத்து பேசுகிற தலைவராக அவர் இருக்கின்றார்.

தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது விளம்பர வெளிச்சத்தில் அரசியல் நடவடிக்கைகளை அவர் உருவாக்குவது நான் அவரிடத்திலே பணிவோடு பண்போடும் அடக்கத்தோடும் கேட்கிறேன். அண்ணாமலை அவர்கள் ஆற்றிய சேவைகள் என்ன இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அண்ணாமலை அவர்கள் தாய் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்ன மக்கள் தொண்டு என்ன அவர்கள் இந்த தாய் தமிழ் நாட்டு மக்களின் உரிமைகளை அவர்கள் பெற்று கொடுத்தது என்ன மொழி உரிமை பெற்றுக் கொடுத்தாரா இன உரிமை பெற்றுக் கொடுத்தாரா? ஜீவாதார உரிமை பெற்றுக் கொடுத்தாரா பத்தாண்டு காலம் இன்றைக்கு மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூலமாக இன்றைக்கு தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எல்லோரையும் வசை பாடுகிற அண்ணாமலை தாய் தமிழ்நாட்டிற்காக நீங்கள் பொறுப்பேற்றதற்கு பிறகு என்ன செய்தீர்கள் என நீங்கள் பட்டியலிட்டு சொன்னால் அது மக்களுக்கு எத்தனை பேர்களுக்கு பயன்பெற்று இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்வதற்கு கூட தயங்கவும் மாட்டோம்.

நீங்கள் எங்களை அழிக்க நினைத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அளிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்பைவிட மிக வலிமையாக எடப்பாடி உடைய தலைமையிலே விஸ்வரூபம் எடுத்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறியக்கூடிய காலம் மிகத் தொலைவில் இல்லை. பத்து 1972 லே தொடங்குற போது இது மிட்டா மிராசு களுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல ஏழை எளிய சைக்கிள் ரிக்ஷா தொழிலாளிகள், கூலி தொழிலாளர்களுக்குச் சென்றவர்கள், சாமானியர்கள், மாணவர்கள், தாய்மார்கள், தொழிலாளர்கள்,விவசாயிகள் என்று இது சாமானியர்களுக்கான கட்சி இன்னும் சொல்லுகிறேன்.

r b udhayakumar annamalai

ஏழைகளுக்கான ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான் 52 ஆண்டுகளில் எத்தனையோ சவால்களை சந்தித்து இருக்கிறது இமாலய வெற்றி சந்தித்திருக்கிறது பல தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது. ஆனால் அதிமுக ஒரு நாளும் மக்கள் பணியில் இருந்து பின் வாங்கியது இல்லை மக்கள் தொண்டு ஆற்றுவதில் இருந்து பின் வாங்கியதில்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் சரி தற்போது எடப்பாடி காலத்திலும் சரி அதிமுக மக்கள் சேவை ஆற்றுகிற இயக்கம் அதன் கொள்கை லட்சியம் எல்லா மக்கள் சேவை ஒன்றுதான் அது தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஆகவே, இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து நீங்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து எல்லோரையும் வசை பாடுவதை தான் வேலையாக வைத்திருக்கிறீர்கள். மக்களுக்கு ஆற்றிய சேவைகள் என்ன என பட்டியலிட்டு அதனால் எட்டு கோடி தமிழர்கள் தமிழக மட்டுமல்லாது. உலகத்தில் உள்ள தமிழர்கள் எத்தனை பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்ற பட்டியலை சொன்னால் அது உண்மை என்று நிரூபித்தால் நீங்கள் அதிமுக இடத்தை பிடிக்க தேவையில்லை.

மக்களே உங்களுக்கு தருவதற்கு தயாராக இருப்பார்கள். அதை விடுத்து விட்டு ஆளுகிற கட்சியை வசைப்படாமல் குறைகளை சுட்டி காட்டாமல் அவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்டாமல் அதிமுக மத்தியிலும் மானியத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்கிற ஒரே காரணத்தினால் எங்களை நேசிக்க பார்ப்பதும் அழிக்க பார்ப்பதும் தொண்டர்களை மன உளைச்சலில் வீழ்த்துவதும் எங்கள் தலைவர்களை பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம் ஆதாரம் என்று சொல்லி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதை பார்க்கிறபோது உங்களை எப்படி இந்த கட்சிக்கு தலைவராக கட்சியை வழி நடத்துகிற முன்னோடியாக உங்கள் தொண்டர்கள கொள்வார்கள் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

விளம்பர வெளிச்சம் என்பது எல்லோருக்கும் கிடைக்கும் அது ஒன்றும் பெரிய மாய மந்திரம் இல்லை சூத்திரம் இல்லாமல் இல்லை அது நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்றால் உழைப்பு தியாகம் உங்களிடத்தில் எந்த அளவில் இருக்கிறது என்ற மதிப்பீடு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் மக்கள் அந்த மதிப்பீடை தருவார்கள். இனியும் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டாம் உங்களுடைய கவனம் திமுக கட்சி ஆற்றுகிற சேவைகளை குறைகளை கூறுங்கள். காய்கறி விண்ணை முட்டும் அளவுக்கு வந்திருக்கிறது காய்கறி உற்பத்தி குறைந்திருக்கிறது.

தரம் குறைந்து இருக்கிறது அதிமுக ஆட்சியில் தோட்டக்கலை கையாண்ட முறை மாறி இருக்கிறது இதையெல்லாம் சொல்ல வேண்டிய அண்ணாமலை ஜெயலலிதாவின புகழை சொல்வதாக சொல்லி இன்றைக்கு அதில் ஏதேனும் திசை திருப்புகிற முயற்சியை மேற்கொள்வீர்கள் ஆனால் ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் உங்களை மன்னிக்காது. அதிமுகவை நீங்கள் வளர்க்க வேண்டாம் பாதுகாக்க வேண்டாம். ஆனால், அழிக்க நினைத்தால் அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போனார்கள் என்ற வரலாறு தமிழகத்தில் இருக்கிறது என்பதை நினைவூட்டி அதிமுக மகா சக்தி படைத்த இயக்கம் மனிதப் புனிதர் எம் ஜி ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் எத்தனையோ கட்சிகள் ஆரம்பித்து வளர்ந்து காணாமல் போய் இருக்கிறது. ஆனால் அதிமுக இன்றைக்கு ஆணிவேராக 2 கோடி தொண்டர்கள் நின்று ஆலமரமாக காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆணிவேரை நீங்கள் அசைத்துப் பார்க்க முடியாது தொட்டுப் பார்க்க முடியாது. தொண்டர்களை திசை திருப்ப முடியாது. தொண்டர்கள் கொள்கைகளால் ஊறிப் போய், கொள்கைகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக எங்கே இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். அது தமிழகத்தில் தான் இருக்கும் இந்திய மக்களுக்காக தமிழக மக்களுக்காக சேவை ஆற்றிக் கொண்டுதான் இருக்கும் ஜெயலலிதாவின் புகழை சொல்வதற்கு எட்டு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்.

புகழ் பாடி ஜெயலலிதாவின் வழியில் நடப்பதற்கு நீங்கள் முன் வந்தால் அதையும் நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம் ஆனால் நீங்கள் உள்நோக்கத்தோடு சொல்வீர்களானால் அதை தடுப்பதற்கும், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி தலைமையில் ஆணையிட்டால் எந்தவித போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருப்போம் என்பதை சொல்லி அண்ணாமலைக்கு எச்சரிக்கையாக சொல்வதை கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!