பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? ரகசியத்தை உடைத்த அதிமுக Ex.புள்ளி!

Author: Hariharasudhan
18 December 2024, 2:46 pm

பாஜக உடன் கூட்டணி கிடையாது என டிடிவி தினகரனின் பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோர் கூறியுள்ளனர்.

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுக, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்தல்களைச் சந்தித்தது. இதில், 2019-ல் ஒரு எம்பியும், 2021-இல் எதிர்கட்சி அந்தஸ்தையும் அதிமுக பெற்றது.

ஆனால், இதன் பிறகு அதிமுக தலைவர்கள் குறித்தான பாஜக மூத்த தலைவர்களின் சில ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளால் தங்களது கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால், 2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்தது.

அதேநேரம், பாமக, அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி உடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால், இரு தரப்பும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனையடுத்தும், தற்போது வரை அதிமுக – பாஜக கூட்டணி இல்லை. இருப்பினும், அவ்வப்போது சில முக்கிய தலைவர்களின் கருத்துகளால் மீண்டும் இந்தக் கூட்டணி உருவாகுமோ என்ற சூழலை உருவாக்குகிறது.

BJP AIADMK Alliance in 2026 alliance d jayakumar

அதிலும், ஒருங்கிணைந்த அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைவு என்ற டிடிவி தினகரனின் பேச்சு ஆகியவை மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணியா என்றக் கேள்வியை முன்வைத்து உள்ளது. ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்ஐ, 3 ஐடி அதிகாரிகள் அதிரடி கைது.. ரூ.20 லட்சம் வழிப்பறியில் சிக்கியது எப்படி?

இதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “பாஜக உடன் அதிமுக கூட்டணி என்பது குறித்த கற்பனைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை எடப்பாடி கூறியுள்ளார்.

அதன்படியே நாங்கள் செயல்படுவோம். தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளவே சிலர் அதிமுக கூட்டணிக்கு வரும் எனக் கூறுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறியுள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!