கால்குலேட்டரை மிஞ்சும் சிறுவன்… கணிதத்தில் உலக சாதனை படைத்து வரும் 3ஆம் வகுப்பு மாணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 12:43 pm

கால்குலேட்டரை மிஞ்சும் அளவுக்கு கணிதத்தில் சாதனை படைக்கும் சிறுவன். இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் ஹியூமன் கால்குலேட்டர் என சான்று வழங்கியுள்ளது.

பழனி அக்ஷயா அகாடமி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் எட்டு வயது சிறுவன் அபிநவ். சிறுவன் அபினவ் கால்குலேட்டரையே மிஞ்சும் அளவுக்கு கணிதத்தில் சாதனை படைத்து வருகிறான்.

ஓரிலக்க, ஈரிலக்க எண்களின் தொடர்ச்சியாக பெருக்குதல், கூட்டுதல், மடங்குகள், வர்க்கம், கண எண்கள், பிதாகரஸ் எண்கள் தொடர்பை காணுதல் எனக்கு கால்குலேட்டரை பயன்படுத்தி விடை தெரிந்து கொள்ள வேண்டியவற்றை, கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் சிறுவன் அவினா விடைகளை கூறி அசத்துகிறான்.

மேலும் ஒருவரின் வயதை கூறினால் அதை நொடிகளாக கணக்கிட்டு கூறக்கூடிய அளவுக்கு அபார திறமை பெற்றுள்ளான்.

சிறுவன் அபினாவின் திறமையை இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆய்வு செய்து எங்கஸ்ட் ஹுமன் கால்குலேட்டர் என்று சான்று வழங்கியுள்ளது.

சிறுவயதில் கணிதத்தில் அபார திறமை பெற்றுள்ள சிறுவனை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நண்பர்கள் பாராட்டினர்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது கணித திறமையை வெளிப்படுத்தி முதல்வரிடம் பாராட்டு பெற வேண்டும் என்பது தனது ஆசை என சிறுவன் அபிநவ் தெரிவித்துள்ளான்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?