ரீ ரிலீஸ் ஆனது தல – தளபதியின் ராஜாவின் பார்வையிலே : போஸ்டர் யுத்தம் நடத்திய ரசிகர்கள்… தனியார் திரையரங்கன் ஆச்சரியமான செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 10:37 am

இப்படியும் எல்லோரும் காம்பரமேஷன் ஆகிட்டா ? பிரச்சினை இல்லாம இருக்கும் ? கரூரில் தலையா ? தளபதியா ? துணிவா ? வாரிசா ? என்ற போட்டியில் இருவரும் நடித்த படத்தினை போட்ட தனியார் திரையரங்கத்தின் செயலுக்கு பாராட்டு

தமிழக அளவில் மட்டுமில்லாமல், உலகளவில் தற்போதுள்ள சினிமா ஸ்டார்களில் மிகவும் கவனம் அதிகம் செலுத்துபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித் நடித்து வெளி வர உள்ள படங்களில் தான் ரசிகர்கள் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர்.

இந்நிலையில், வரும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ரசிகர்களின் தல என்றழைக்கப்படும் அஜித் ன் துணிவு திரைப்படமும், தளபதி என்றழைக்கப்படும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் ரீலிஸ் ஆகின்றது. தலையா ? தளபதியா ? என்று ஆங்காங்கே பெரும் போட்டி நிலவி வரும் நிலையில், கரூரில் உள்ள தனியார் திரையரங்கம் இருவரும் நடித்த திரைப்படமான ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தினை திரையிட்டு அதில் பெரும் கவனத்தினை இழுத்து வருகின்றது.

இதில் தல அஜித், தளபதி விஜய் ஆகிய இருவரும் நடித்த ஒரே திரைப்படமான ராஜாவின் பார்வையிலேயே என்ற திரைப்படத்தினை அந்த திரையரங்கம் வெளியிட்டுள்ளது. கரூர் மாநகரின் மையப்பகுதியில் பழைய திண்டுக்கல் ரோட்டில் அமைந்துள்ள லெட்சுமிராம் திரையரங்கில் வெளிவந்துள்ள இந்த திரைபடமான, ராஜாவின் பார்வையிலே (Rajavin Parvaiyile) 1995 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். முக்கியக் கதாப்பாத்திரங்களில் அஜித் குமார், விஜய், இந்திரஜா நடித்துள்ளனர்.

ஜானகி செளந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். தற்போது தலையா ? தளபதியா ? அஜித் ஆ ? விஜய் ஆ ? என்று வரிச்சு கட்டி தங்களது பலத்தினை ரசிகர்கள் காட்டி வரும் நிலையில், துணிவா ? வாரிசா ? திரைப்பட்த்தினை எதிர்பார்த்து ஆங்காங்கே இதே போல ஆங்காங்கே பிரச்சினை இல்லாமல், அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென்பதே அனைவரது கருத்து ஆகும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

இது மட்டுமில்லாமல், ஆங்காங்கே போஸ்டர்களில் யுத்தம் செய்து வரும் ரசிகர்கள் மத்தியில் கரூரில் வாரிசு என்கின்ற திரைப்படத்தின் அருகிலேயே புதிய வடிவில் புதுப்பொழிவுடன் DTS Effects உடன் தல, தளபதி இணைந்து நடிக்கும் ராஜாவின் பார்வையிலே என்கின்ற போஸ்டர்கள் கரூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் ஓட்டப்பட்டிருக்கும் காட்சிகள் தமிழக அளவில் பெரும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…