உண்மையை கூறியுள்ளேன்…எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார் : கோடநாடு கொலை, கொள்ளை விசாரணைக்கு பின் ஆறுக்குட்டி பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 6:36 pm

கோவை : கோடாநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து விசாரணை முடிந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ஒன்றரை மாதம் கனகராஜ் தன்னிடம் பணி புரிந்த நிலையில் தன்னை விசாரணைக்கு அழைத்தனர்.

உண்மையை சொல்லி இருக்கின்றேன். விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சொல்லி இருக்கின்றேன். கனகராஜ் ஓட்டுநராக வேலை பார்த்தது உண்மைதான். எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு வருகின்றேன் என்று சொல்லி இருக்கின்றேன்

விசாரணை சரியாக நடைபெற்றது. வேலையை விட்டு சென்றவுடன் அவருடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை என ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!