நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம் என்ன கோடி ரூபாய் தர தயார் : பேரம் பேசிய திமுக பிரமுகரின் ஆடியோ லீக்!!
Author: Udayachandran RadhaKrishnan3 July 2022, 1:46 pm
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன் நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்பு பேரம் பேச திட்டமிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய கண்ணன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர்., கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் குமாரபாளையம் நகராட்சியில் 31 வது வார்டு சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று., நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 33 வாக்குகளில் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நகர மன்ற தலைவராக பொறுப்பேற்று கடந்த நான்கு மாதங்களாக தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வெற்றி பெறுவதற்கு முன்பு விஜய கண்ணன் நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு 20லட்சம் ரூபாய் முதல் கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் குடும்ப அட்டை ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச அனுமதி சீட்டு உள்ளிட்டவை வழங்கப்படும் என குறித்து பேசி ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுயேச்சை நகர்மன்ற தலைவர் விஜய கண்ணன் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்பு பேசிய ஆடியோ தற்போது வெளியாகி இருப்பது குமாரபாளையம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.