விஜய் – அஜித் அடுத்து இந்த நடிகர் தான் டாப்.. ரேசில், பக்கா பிளான் போடுகிறாரே..!

Author: Rajesh
20 May 2022, 10:12 am

எம்.ஜி.ஆர் படங்களை குடும்பம் குடும்பமாக பார்த்தனர். அதன்பிறகு ரஜினியை பின் தொடர்ந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் அடுத்த படியாக தற்போது சிவகார்த்திகேயனை குடும்ப ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டான் படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் இவர் கொடுத்த டாக்டர் படமும் செம ஹிட். அடுத்து அடுத்து ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்துகளை படைத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரஜினி-கமல், விஜய்- அஜித் இவர்களுக்கு பிறகு சிம்பு, சூர்யா, தனுஷ் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் இவர்களையெல்லாம் ஓரங்கட்டி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சிம்பு மாநாடு படத்தை ரசிகர்கள் வெற்றிப்படமாக ஆக்கினார்கள். ஆனால் அந்த படத்திற்கு பிறகு 6 மாதங்களை கடந்தும் அவர் படம் வெளியாக வில்லை. தனுஷ் தனது சொந்த பிரச்சினை, ஹாலிவுட் என அந்த நிலைமையில் சுற்றிக் கொண்டு தனது மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவது போல தெரிகிறது.

சூர்யாவும் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிப்பு பணியில் இறங்குகிறார். மேலும் இவரின் ஜெய்பீம் படத்தை பார்த்து இனிமேல் இந்த மாதிரியான படத்தை தான் கொடுப்பார் என்ற மன நிலைக்கே வந்து விட்டனர் மக்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கேற்றபடி தான் சிவகார்த்திகேயன் மக்கள் ஆசையை நிறைவேற்றி வருகிறார். மேலும் அஜித் -விஜய் இவர்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும் நடிகர், சிவகார்த்திகேயன் தான் என்று பயில்வான் ரெங்கனாதன் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ