திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் 500 பேரிடம் பணம் வசூல் : ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த 3 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 1:26 pm

விழுப்புரம் : திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலர்ப்பர்ஸ் என்ற பெயரில் 500 நபரிடம் ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் மூலம் ஜாலிசிட்டி, அபுர்பா சிட்டி, சூப்பர் சிட்டி, சன் சிட்டி, ஏர்போர்ட் சிட்டி என்ற பெயரில் 500 நபர்களிடமிருந்து மாதம் மாதம் பணம் வசூலித்து ரூ 1 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பரணிதரன், பாலாஜி, பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய 4 பேர் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து விழுப்புரம் காகுப்பம் சித்ரா என்பவர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் வழக்குப்பதிவு செய்து, பரணிதரன், பாலாஜி, இளங்கோவன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 794

    0

    0