குணா குகைக்கு விசிட் அடித்த REAL மஞ்சும்மல் பாய்ஸ்… செல்பி எடுக்க குவிந்த சுற்றுலா பயணிகள்.. வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 11:25 am

குணா குகைக்கு விசிட் அடித்த REAL மஞ்சும்மல் பாய்ஸ்… செல்பி எடுக்க குவிந்த சுற்றுலா பயணிகள்.. வைரல் வீடியோ!

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் தற்பொழுது முக்கிய சுற்றுலா பகுதியாக குணா குகை உள்ளது. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்” மஞ்சுமல் பாய்ஸ் “திரைப்படத்திற்கு பிறகு குணா குகையை குவிந்து வருகின்றனர் .

இந்நிலையில் இன்று கொடைக்கானல் சுற்றுலா தளங்களான மோயர் சதுக்கம் ,பைன் பாரஸ்ட் ,குணா குகை போன்ற பகுதிகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு குணா குகையில் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் ஒருவர் குகைக்குள் விழுந்து இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்டனர் .

அதை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மஞ்சுமல் பாய்ஸ் இன்று அந்த குகைக்குள் விழுந்த சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பைன்பாரஸ்ட் ,குணா குகை பகுதிகளில் வந்த போது சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்து சுற்றுலா பயணிகள் அவர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். மஞ்சுமல் பாய்ஸ் உண்மை கதாபாத்திரங்கள் வருகையால் சுற்றுலா தலங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!