ஓடுங்க ஓடுங்க மக்களே.. 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. பீதியில் உறைந்த குடியிருப்பு வாசிகள்..!

Author: Vignesh
31 July 2024, 11:16 am

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. முன்னதாக, குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில், கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வயநாடு மலப்புறம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

இதனால், அந்த எட்டு மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கனமழை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோட்டயத்தில், உள்ள எம் ஜி பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகம் ஆகியவை இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைத்துள்ளது. மேலும், அனைத்து பி.எஸ்.சி தேர்வுகளும் நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 197

    0

    0