3 மாவட்ட மக்களே உஷார்.. மிதக்கும் தென்சென்னை.. Powerful ரெட் அலர்ட்..

Author: Hariharasudhan
12 December 2024, 5:58 pm

தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (டிச.12) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கப்படுகிறது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது.

Tenkasi Rain alert

அதேபோல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Red Alert for TN Southern districts

முன்னதாக, கடந்த அக்டோபர் மாத பிற்பகுதியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் (Fengal Cyclone) சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதையும் படிங்க: பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்.. நிரம்பிய பூண்டி ஏரி.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

அது மட்டுமல்லாமல், கடலூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. இந்த நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை விட்டுவிட்டு பெய்கிறது. இதனால் பம்மல், கீழ்கட்டளை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!