ஒரு சராசரி மனைவி போல தான் நானும்… மீடியாவின் துணை மட்டும் தான் எனக்கு இருக்கு ; கண்ணீர் விடும் பெலிக்ஸின் மனைவி..!!!

Author: Babu Lakshmanan
16 May 2024, 7:22 pm

ரெட் ஃபிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற கோரி அவரது மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் மனுவை அளித்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில், ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் முதலமைச்சரின் தனி பிரிவில் தனது கணவர் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற கோரி புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் கூறியதாவது :- இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் மனு அளிக்க வந்திருந்தேன், அங்கிருந்த அதிகாரி இதனை நிச்சயமாக முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: நிலத்தகராறில் கட்டப்பஞ்சாயத்து.. அடியாட்களுடன் சென்று மிரட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் ; போலீஸில் புகார்…!!

நான் ஒரு தமிழ் குடிமகள், மீடியாவின் துணை மட்டும் தான் எனக்கு இருக்கிறது. வேற எதுவும் கிடையாது, ஒரு சராசரி மனைவி ஒரு கணவரை மீட்டு வர எப்படி ஆசைப்படுவார்களோ, அதே போல தான் நானும். இது சம்பந்தமாக நேற்று ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தேன். ஏப்ரல் 2024 வெளியிட்ட அந்த வீடியோவை நாங்கள் தற்போது வேறு யாரும் பார்க்காத வண்ணம் ((பிரைவேட் செய்து) வைத்துள்ளோம், என கூறினார்.

வழக்கறிஞர் ஜான்சன் கூறியதாவது :- கோயம்புத்தூரில் கடந்த மூன்றாம் தேதி இது தொடர்பாக வழக்கு அவர் மீது பதியப்பட்டது. பத்தாம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ்சை ஆஜர்படுத்தாமல் 13ஆம் தேதி தான் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறார்கள். எனவே இதில் சட்ட ரீதியாக ஒரு தவறு நடந்துள்ளது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். மேலும் பிடிவாரண்ட் இல்லாமல் அவரை கைது செய்துள்ளார்கள்.

நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று ஒரு சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் வழக்கோடு தொடர்புடைய மின்னணு பொருட்கள் மட்டுமே கைப்பற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட நிலையில், சொத்துக்களின் அசல் ஆவணங்களை கைப்பற்றியுள்ளார்கள். நிறுவனத்தில் உள்ள பொருட்களை கைப்பற்றியதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டதிலும் பிழை நடைபெற்றிருக்கிறது. அவர் வேண்டுமென்று இதனை பதிவேற்றம் செய்யவில்லை. ஒரு நெறியாளராக இதனை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து பல்வேறு கருத்துகளும், சர்ச்சைகளும் எழுந்த நிலையில் நேற்று இது சம்மந்தமாக ஒரு வீடியோ வருத்தம் தெரிவித்து வெளியிட்டு, அதனை பொதுமக்கள் பொது பார்வையில் இருந்து நீக்கி விட்டோம் என்ற கருத்துகளை தான் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வீட்டின் சூழ்நிலை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அவர்கள் கருணைக் கொண்டு வாழ்க்கை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். கால் நூற்றாண்டாக செய்தித் துறையில் இருப்பவர். எனவே அவர் மீது கொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 222

    0

    0