இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறை : பீஸ்ட் படம் குறித்து வெளியான புதிய தகவல்கள்..!

Author: Rajesh
8 April 2022, 2:27 pm

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக இருக்கிறது. படத்துக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூட்யூபிலும் சாதனை படைத்தது.

ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், விஜய் ரிச்சாகவும், நெல்சனின் மேக்கிங் பிரஷ்ஷாகவும் இருப்பதாக சிலாகித்தனர். மேலும் கேமராவும் சிறப்பாக இருப்பதாக கூறினர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேமரா குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, கேமராவின் பெயர் Red V Raptor ஆகும். இந்த கேமராவில் 2K,4K, 6K, 8K என்ற வகைகள் இருக்கின்றன. இதில், Frame For Secondsன் தரம் சிறப்பாக இருப்பதால் இதில் எடுக்கப்படும் காட்சிகள் மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும், இதில் எடுக்கப்படும் ஸ்லோ மோஷன்கள் மிக மிக துல்லியமாக இருக்கும் என்பதால் பீஸ்ட் படத்தை காணும் ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த கேமராவைப் பயன்படுத்திய முதல் இந்தியப் படம் பீஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!