திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் Instagram வலைதளத்தை பயன்படுத்தி வரும் பெயர் தெரியாத நபர் பெண்கள் அணியும் உள்ளாடைகளை போட்டுக் கொண்டு திரைப்பட பாடலை திருத்தி பாலியல் சம்பந்தமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் அறுவருக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்தியும் பல வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இவர் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அந்த வீடியோவை பார்க்கும் நபர்களின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் உள்ளது.
மேலும், இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பரப்புவதால் அதனை பார்க்கும் நபர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கேலி கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் மேற்குறிப்பிட்ட Instagram ID-யை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தியும், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் உடல்ரீதியாகவும், அநாகரிகமாக அறுவருக்கதக்க வகையிலும் வீடியோக்கள் வெளியிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்படி பெண் காவலர் பிரீத்தி என்பவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: பிரியங்கா – மணிமேகலை விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்வி : வாய்க்கு வந்தபடி பேசிய CWC புகழ்!
மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள மேல்பட்டி கொத்தமாடி பட்டி குப்பம் அகிலம் என்பவரது மகன் கௌதம் (24) என்பவரை கைது செய்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.
மேலும் அவர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு பயன்படுத்திய அவரது Instagram ID யினை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.