வெடித்து சிதறிய குளிர்சாதன பெட்டி… அலறி ஓடிய பொதுமக்கள்…

Author: kavin kumar
23 January 2022, 2:50 pm

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து‌ ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காட்டு எடையார் கிராமத்தைச் சார்ந்த மாணிக்கம் மகன் ரவிச்சந்திரன்(37). இவருக்கு சொந்தமான SKA பால் ஸ்டோரில் சுமார் 350 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கடையின் உரிமையாளர் ரவிச்சந்திரன் இரும்பு தகர ஷீட்டுகள் முற்றிலும் சேதமடைந்தது.

வெடிசத்தத்தை கேட்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அருகில் இருந்த ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர்களின் கூரை வீடுகள் முழுவதும் எரிந்தன. இந்த விபத்தில் உயிர்சேதம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்தப்பினர். இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 7593

    0

    0