பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு.. இதுதான் சமூக நீதியா? திமுக பிரமுகரான சலூன் கடைக்காரருக்கு காத்திருந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 12:59 pm

பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு.. இதுதான் சமூக நீதியா? திமுக பிரமுகரான சலூன் கடைக்காரருக்கு காத்திருந்த ஷாக்!

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ் என்ற பெயரில் சலூன் கடை ஒன்று உள்ளது. இங்கு கடந்த 9ம் தேதி அன்று பக்கத்து கிராமமான கௌாப்பாறை கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞர் முடிவெட்ட சென்றுள்ளார்.

அப்போது முடி திருத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடும் யோகேஷ், அந்த இளைஞரிடம், நீ எந்த ஊர் என கேட்டு, பின்பு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என தெரிந்தவுடன் பட்டியல் இனத்தவர்களுக்கு இங்கு முடி வெட்டுவதில்லை உனக்கு முடி வெட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் இது குறித்து தனது ஊரில் உள்ள இளைஞர்களிடம் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

இத்தகவலை அறிந்த இளைஞர்கள், சலூன் கடைக்கு சென்று பட்டியல் இனத்தவர்களுக்கு ஏன் முடி வெட்டுவதில்லை என முறையிட்டுள்ளனர்.

அப்போது சலூன் கடை உரிமையாளர்கள் யோகேஷ் மற்றும் அவரது தந்தை கருப்பன் ஆகிய இருவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்டமுடியாது என்று சாதி பெயரை குறிப்பிட்டு உச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது காலம் காலமாக உள்ள வழக்கம் எனவும் இது குறித்து காவல் நிலையத்தில் வேண்டுமானால் புகார் அளித்து கொள்ளுங்கள் என கடையின் உரிமையாளர்கள். தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரம்.. காட்டிக் கொடுத்த MERCEDES… பரவிய வீடியோ : ஸ்கெட்ச் போட்ட போலீஸ்!

அப்போது தட்டிக் கேட்ட பாதிக்கப்பட்டவர், சமூக நீதி பேசும் திமுகவில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா? இதைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் கூறினார்கள் என கேட்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்டவர் நேற்று அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் அரூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று சலூன் கடை உரிமையாளர்கள் கருப்பன் மற்றும் அவரது மகன் யோகேஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி