முகப்பரு இருந்ததால் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பு.. நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து மிரட்டல் : மென்பெறியாளர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 2:31 pm

கோவை : மனைவியின் முகத்தில் முகப்பரு இருந்ததால் அவருடன் சேர்ந்து வாழ மறுத்து, அவரது நிர்வாண படத்தை காட்டி டார்ச்சர் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

கோவை காந்திபுரம் முதலாவது எக்ஸ்டென்சன் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 32). சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கும் கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் பெற்றோர் சீதனமாக 51 சவரன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் கொடுத்து திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், பிச்சைமுத்து தனது மனைவியின் முகத்தில் முகப்பரு இருந்ததால் அவருடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார்.

மேலும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் பெற்றோர் வீட்டுக்கு சென்று தனது பெயரில் சொந்த வீடு வாங்கி தருமாறு மனைவியை டார்ச்சர் செய்துள்ளார். இதற்கு பிச்சைமுத்துவின் தந்தை செல்லதுரை, தாயார் ஜெயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரர் முத்துக்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் பிச்சைமுத்து தனது செல்போனில் உள்ள மனைவியின் நிர்வாண படத்தை காட்டி அவரை டார்ச்சர் செய்து தாக்கி மிரட்டியுள்ளார். இதில் காயமடைந்த அந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அவர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்துவை கைது செய்தனர். உடந்தையாக இருந்த செல்லதுரை, ஜெயலட்சுமி, மகேஸ்வரி, முத்துக்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1395

    0

    0