திமுக குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சு… நிருபர்கள் கேட்ட கேள்வி : முகம் மாறிய கனிமொழி எம்பி.!!

Author: Udayachandran RadhaKrishnan
21 ஜூலை 2024, 7:47 மணி
Kanimozhi
Quick Share

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான முதல் OTT தளமான “PERIYAR VISION-(Everything for everyone) ” தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு இந்த ஓடிடி தளத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த புதிய ஓடிடி தளத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோ பதிவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தந்தை பெரியார் உலகளாவிய மானுடத் தலைவராக பார்க்கப்படுகிறார்.
அவரது வரலாறு, கொள்கைகள் என அனைத்தும் கலை வடிவமாக கொண்டு செல்லும் திராவிட இயக்கத்திற்கு பாராட்டுக்கள் என தெரிவித்தார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் பெருகி இருக்க கூடிய சூழலில் இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் கொள்ளைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்ட முதல் சமூக நீதி ஓடிடி தளம் தொடங்கப்பட்டுளள்து. கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி இதுவாக தான் இருக்கும் என கூறினார். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிட இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஓடிடி தளத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த விழாவின் மேடையில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது உலகம் முழுவதும் கார்பரேட் சாமியார்கள் stress, depression என்பதை வைத்து தான் காசு பார்க்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதி பற்றி தான் ஆர்வம் இருந்தது. ஆனால் வட மாநிலத்தவர்கள் கனிமொழி வெற்றி பெறக் கூடாது என்று தான் கவனித்தார்கள், இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் ஆட்டி வைக்கிறார் என்று அவர் வெற்றி பெறுவது பொய்யாக இருக்கக் கூடாதா என்று தான் நினைப்பார்கள். பெருமைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர் என தெரிவித்தார்.

கருணாநிதி காலத்தில் இருந்தே திரைப்பட தணிக்கை மீது விமர்சனங்கள் இருந்து வந்துள்ளது. குறிப்பாக பராசக்தியில் வெட்டப்பட்ட வசனங்கள் அளவில்லாதவை என கூறினார். குறிப்பாக உதயசூரியன் இனி பார்வையில் விழித்துக் கொண்ட பார்வையில் என்ற வரிகளை அன்பே வா படத்தில் புதிய சூரியன் என்று மாற்றப்பட்டது, இதில் எல்லாம் தான் திமுக வளர்ந்தது என கூறினார். இப்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார். இந்த சூழலிலாவது பெரியார் படத்தை வெளியிட வேண்டும், திரையரங்குகள் முன்பு யாராவது பிரச்சினை செய்யுங்கள் என கேட்டு கொண்டார்.
பெரியார் படத்தை டிஜிட்டலைஸ் செய்துள்ளார்கள் என்று சொன்னார்கள் இப்போது விட்டாலும் பரபரப்பாகும் என்ற பயம் உள்ளது. எங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் தான் நன்றாக இருக்கும் நாங்கள் எதிர்பில் தான் வளருவோம் எனவும்
தலைவர் கலைஞரை விட தற்போதுள்ள முதலமைச்சர் வேகமானவர் எனவும் தெரிவித்தார்.

பின்னர் விழாவின் மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது தொடர்ந்து சுயமரியாதைகாரராக இருப்பது கடினம், அதிலும் சினிமா துறையில் தொடர்ந்து அதை கடைப்பிடித்து வருகிறார் சத்யராஜ்.
Liberty இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில் தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம் என தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது சிந்தனை உரிமை கிடையாது எந்த liberty யும் கிடையாது.
எல்லாருடைய liberty காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல் என கூறினார். மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும், தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்த மனிதனை மனித நேயத்துடன் பார்த்த தலைவர் நிச்சயம் அறிவியலை நேசிக்க தான் செய்வார்.

இன்று வரை நகைச்சுவை என்ற பெயரில் பெண்களுக்கு சமைக்க தெரியுமா என்பார்கள், என்னையும், வழக்கறிஞர் அருள்மொழியையும் பார்த்து கேட்பார்கள்.
பெண் என்றால் சமைக்க தெரிய வேண்டும் என்று இப்பொழுதும் உள்ளது.
குழந்தைகள் வேண்டுமென்றால் பெற்றுக் கொள்வோம் எத்தனையோ குழந்தைகள் தாய் தந்தை இல்லாமல் உள்ளனர் என்று இப்போது சொல்லும் கருத்துக்களை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் சிந்தித்து நமக்காக சொல்லித் தந்திருக்கக் கூடியவர் பெரியார்.

மக்களிடையே இருந்த மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர் பெரியார்.டெக்னாலஜி வழியாக ஒவ்வொரு நாளும் தவறான செய்திகள் வெறுப்பு காழ்புணர்ச்சி மனித இனத்திற்கு எதிரான செய்திகள் பரப்பி வருகிறார்கள். மக்களை மூடநம்பிக்கைகளை நோக்கி 50 ஆண்டுகளுக்கு பின்னான சிந்தனைகளை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி தொடர்ந்து பயன்படுத்தி தவறான செய்திகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த சூழலில் இந்த டெக்னாலஜி நாமும் கையில் எடுத்துள்ளோம். குழந்தைகளுக்கு பழைய விஷயங்களை சொல்லித்தர மாட்டோம் தமிழர்களுக்கு மறதி உள்ளது எங்கிருந்து வந்தோம் எதை தக்கது வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை என தெரிவித்தார்.

எத்தனையோ போராட்டக்காரர்கள் திராவிட சிந்தனையாளர்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லித்தராமல் இருக்கிறோம்.
இப்போது வந்து பெரியார் சிலை மேல் காவி சாயம் ஊற்றுகிறார்கள், சிலைகள் பேசும் என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் நீங்கள் செருப்பு மாலை போடும்போது ஜோடி செருப்பாக போடுங்கள் இல்லை என்றால் பயன்படாது என்று சொல்லி இருப்பார்.
இவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போதுதான் இந்த தலைமுறைகள் யார் இந்த மனிதன் என்று அறிய முற்படுகிறார்கள் என தெரிவித்தார். வடமாநிலத்தில் ஒரு போராட்டத்தின் போது கூட பெரியாரின் புகைப்படம் வைத்திருக்கப்படுகிறது. இதற்காக பாஜகவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
தொடர்ந்து, உங்களுக்கென்று கருத்துக்கள் இல்லை அதனால், உங்களுக்கு தெரிந்த விதங்களில் எங்களை எதிர்த்து நின்று கொண்டே இருங்கள். அடுத்த தலைமுறை மக்களிடம் அப்போதுதான் எங்கள் கருத்துக்களை விதைகளை விதைத்து கொண்டே இருக்க முடியும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் மேடையில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசியதாவதுமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன்னை மானமிகு சுயமரியாதைகாரன் என சொல்லிக்கொள்வார்.

தந்தை பெரியார் செய்த அமைதி புரட்சியில் சுயமரியாதை வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார் தன்னை பூரண பகுதறிவுவாதி என அடையாளப்படுத்திக் கொண்டார்.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு பார்வை என்னவென்றால் அவரின் கொள்கைகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் அனைத்து வளர்ச்சிகள் குறித்தும் மக்களுக்கு எளிமையாக எடுத்துரைத்தார். அறிவுக்கு எல்லை நிர்ணயிக்க முடியாது என தந்தை பெரியார் தெரிவித்தார்.

அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின்பு வரும் தலைமுறையினர் தந்தை பெரியார் என்ற பிற்போக்குவாதி இருந்தார் என சொல்வார்கள். ஏனெனில் அறிவு பல அளவில் வளர்ந்திருக்கும் என்று அன்றே தெரிவித்தார் சுயமரியாதைக்காரர் தந்தை பெரியார்.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து நிலையில் மக்களிடம் பல மூடநம்பிக்கைகள் ஒளிந்து இருக்கிறது. ஆகவே அறிவு வளர்ச்சி இருக்கிறது. எனவே தந்தை பெரியார் இன்றும் தேவைப்படுகிறார் என்றும் தேவைப்படுவார்.

எந்த ஊரில் பெரியாரை எதிர்த்தார்களோ அதே ஊரில் இன்றைக்கு அவருக்கு சிலை வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் பெரியார்.

நம்முடைய சமூதாயத்திற்கு பெரியார் தேவை. அந்த பெரியாரை ஓடிடி மூலமாக இந்த இளைஞர்கள் கொண்டு வந்துள்ளார்கள்…

திமுகவின் இளைஞரணியின் 45வது தொடக்கவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அவருடைய பேச்சு இன்னும் வேகமாக இந்த இயக்கத்தை வளர்க்கும் என நம்பிக்கை வந்துள்ளது.

டெக்னாலஜி வளர்ந்து உள்ளது. ஆயுத பூஜையின் போது கம்பியூடர்க்கு விபதி பூசுவதில்லை ஏன் என்றார் அது வேலை செய்யாமல் போய்விடும் என்பதறாக. பெரியார் இன்று தேவைப்படுகிறார். கலைஞர் கூறுவார் பெரியார் என்றும் தேவைப்படுவார். பெரியார் என்றால் மனித நேயர் பெண் அடிமை பற்றியும் சுயமரியாதை திருமணத்தை பற்றியும் அந்த காலத்திலே கேள்வி கேட்டவர் பெரியார். வடமாநிலத்தில் சாமியாரை பார்க்க போகும் போது கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் இறந்து போகிறார்கள் கேட்டால் விதி என்கிறார் அந்த சாமியார் இப்படி தமிழகத்தில் ஒரு சாமியார் பேசி விட முடியுமா என தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத்தொகை ரயில்வே திட்டங்கள் என பல திட்டங்கள் நிலுவையில் உள்ளது,இந்த தேர்தல் முடிவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு எல்லோருக்குமான நியாயம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறோம்.

திமுக நிலைபாடு எப்போதும் ஒன்றாக மட்டுமே உள்ளது, நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரான ஒன்று வாய்ப்பு வசதி இல்லாத பிள்ளைகளுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டா கனவாக மாறும் என கூறி இருந்தோம் இது எப்போதும் உணரக்கூடிய சூழல் வந்துள்ளது எங்களை பொறுத்தவரை நீட் வேண்டாம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுக குறித்து கருத்து தெரிவித்த பா ரஞ்சித் குறித்த கேள்விக்கு, அவரின் கருத்துக்கள் போக விரும்பவில்லை, ஒடுக்கப்பட்ட மக்களுடன் தொடர்ந்து போராடி வரும் இயக்கம் திமுக. இந்த குற்றத்தை யாராலும் ஏற்றுகொள்ள முடியாது, குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திமுக நிலைபாடு என தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா? என்ற கேள்விக்கு, முதலமைச்சர் அது குறித்து முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 162

    0

    0