மறுவாழ்வு கொடுக்கும் பள்ளி மாணவன்.. ஈட்டி பாய்ந்து பலியான சிறுவனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 5:36 pm

கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தை சார்ந்த கூலி தொழிலாளியான திருமுருகன் சிவகாமி தம்பதியின் மகனான கிஷோர் வடலூரிலுள்ள எஸ் டி சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்வி பயின்று வந்தார்.

கிஷோர் சிலம்பாட்டத்தில் பயின்று உலக நோபுள் ரெக்கார்டு சாதனையும் நிகழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 24.07.2024 ஆம் தேதி தனியார் பள்ளியில் மாணவர்கள் ஈட்டி எறிதலுக்கான பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது சிலம்பத்திற்கான பயிற்சி மேற்கொண்டிருந்த கிஷோர் என்ற மாணவனின் தலையில் குத்தி ரத்த படுகாயமடைந்தார்.

இதனையடுத்து பள்ளி மாணவன் வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கும் மருத்துவர்கள் பள்ளி சிறுவனை காப்பாற்ற இயலாது மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

அப்போது மூளைச்சாவு அடைந்துள்ளதால் மாணவனை காப்பாற்ற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று ஜூலை 30 பகல் 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் திருமுருகன் சிவகாமி சம்மதம் தெரிவித்த போது சிறுவனின் இதயம் பலவீனமாக உள்ளதால் உடல் உறுப்பு தானம் பெறுவதில் சிரமம் உள்ளதாக பெற்றோர்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனிடயே சிறுவன் உயிரிழந்ததால் மாணவனின் கண் தானத்தை மட்டும் ஏற்றுக்கொண்டனர். சிறுவனை இழந்த குழந்தையின் தந்தையான திருமுருகன் தனது மகனுக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்ற மாணவர்களுக்கும் ஏற்பட கூடாது என்றும் போதிய மைதானம் வசதி இல்லாமல் பயிற்சி மேற்கொண்டதால் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  • Rajinikanth Apologize To Nepoleon போன் போட்டு மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்… நேற்று என்ன நடந்தது?
  • Views: - 204

    0

    0