ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு.. விஜே சித்ராவின் கணவர் கேட்டதற்கான ஆதாரம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை.. !

Author: Rajesh
14 May 2022, 5:56 pm

தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ள இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதத்தில் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் தான் காரணம் என அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது சித்ராவின் கொலைக்கு நான் காரணமில்லை அரசியல் கும்பல் ஒன்று அதற்குப் பின்னால் இருக்கிறது என கூறியிருந்தார். என்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சித்துவின் தோழியான ரேகா நாயர், ஹேமந்த் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளார் என்றும் அவரால் கர்ப்பமாக்கி கைவிடப்பட்டு பிறகு அபார்ஷன் செய்த பல பெண்கள் என்னிடம் வருத்தப்பட்டு புலம்பி உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் பலரிடம் அவர் ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு என கேட்டுள்ளார். ஆதாரங்கள் என்னிடம் உள்ளன தேவைப்பட்டால் அவைகளை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் நான் தயாராக உள்ளேன் எனவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1306

    1

    0