உயிரிழந்த மனைவியின் சடலத்தை கணவர் வீட்டு முன் எரித்த உறவினர்கள் : அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 5:09 pm

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த தாய் மாமன் மகனாகிய பழனிராஜ் என்பவருக்கு கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பழனிராஜ் திருமணமானன ஒரு வருடத்திலேயே அதே ஊரைச் சேர்ந்த பிரபா என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நாகர்கோவில் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புவனேஸ்வரி கடந்த இரண்டு ஆண்டாக தன் கணவனைப் பிரிந்து தாயார் வீட்டில் இருந்து வருகிறார்.

தனது தந்தையும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி, இரவு தன் தந்தை வீட்டின் அருகே இருந்த தந்தைக்குச் சொந்தமான கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது கணவர் தான் காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்பொழுது உடல் கூறு ஆய்வு செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை கணவன் வீட்டு முன்பு வைத்து பெண்ணின் உறவினர்கள் எரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், போலீசார் இருக்கும் பொழுது பெண்ணின் சடலத்தை அவரது கணவர் வீட்டு வாசலில் வைத்து எரித்து வருவதால் பதட்டமான சூழ்நிலைக்கு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 420

    0

    0