திமிங்கல எச்சத்தை கடத்திய திமுக முன்னாள் எம்எல்ஏவின் உறவினர்கள் : 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை…!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2022, 8:45 pm

மதுரை : திமிங்கலத்தின் எச்சத்தை காரில் கடத்தி வந்த திமுக முன்னாள் எம்எல்ஏ உறவினர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் – சிவகங்கை சாலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை பிரிவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக திமுக கொடியுடன் வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையில் இறங்கினர். அப்போது காரில் 2.5 கிலோ எடையுள்ள திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து திமிங்கல எச்சத்தை காரில் கடத்தி திமுக முன்னாள் எம்எல்ஏ உறவினரான லிங்கவாடியை சேர்ந்த அழகு, நந்தம் சீர் வீடு பகுதியை சேர்ந்த பழனிசாமி, நத்தம் பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் காரில் கடத்தி வரப்பட்ட திமிங்கல எச்சம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடத்தப்பட்ட திமிங்கல எச்சம் சுமார் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்சம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1378

    0

    0