கர்ப்பிணியுடன் வேனில் வந்த உறவினர்கள்… தூங்கிக் கொண்டே இயக்கிய ஓட்டுநர் : பயங்கர விபத்து.. 2 பேர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2023, 10:00 pm

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் ராஜா. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நிலையில் அவரது மனைவி சூர்யாவான 7 மாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக மதுரையில் இருந்து கே.வேப்பங்குளம் கிராமத்திற்கு கர்ப்பிணி பெண் உட்பட 20க்கும் மேற்பட்டோர் வேனில் வளைகாப்பு உணவு பொருட்களுடன் கே.வேப்பங்குளம் வந்துள்ளனர்.

அப்போது கமுதி சாயல்குடி சாலையில் இருந்து பிரிந்து கே.வேப்பங்குளம் செல்லும் சாலையில் சென்ற போது வேன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் வேனில் பயணித்த வழிவிட்டான் (45) இளைய வேந்தன்( 10) உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் வேனில் பயணித்த முத்தரசன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் பட்டவர்கள் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

முத்தரசன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கமுதி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!