எங்க சார் ரொம்ப நல்லவரு.. அவர உடனே விடுதலை செய்யுங்க : போக்சோவில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 8:30 pm

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் வரலாற்று ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஆசிரியரை விடுவிக்க கோரி மாணவிகள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்தவர் ராஜ்குமார். 52 வயதான இவர் மதுக்கூர் தாலூகா நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 17ம் தேதியன்று இந்த பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது கால் சூப்பர்வைசராக ராஜ்குமார் இருந்திருக்கிறார் . அப்போது மாணவியின் மேஜை அருகே நாற்காலியைப் போட்டுக் கொண்டு அவரது காலை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த புகார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து ஆசிரியர் ராஜ்குமாரை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்தனர். தஞ்சாவூர் சிலையில் உள்ள ஆசிரியர் ராஜ்குமார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

su

ஆனால் ராஜ்குமார் ஆசிரியர் நல்லவர் என்றும், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்படடுள்ளது. அவரை உடனே விடுதலை செய்து இதே பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்த வேண்டும் என மாணவிகள் பள்ளி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மதுக்கூர் – மன்னார்குடி இடையே கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

ராட்சசி படத்தில் வருவது போல ஒரு ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் சக ஆசிரியர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1497

    0

    0