‘விழிகள் இல்லாத நேரம்’: பார்வை மாற்றுத்திறனாளிகள் இயற்றிய பாடல் கோவையில் வெளியீடு..!!

Author: Rajesh
1 March 2022, 4:52 pm

கோவை : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இயற்றிய பாடல் கோவையில் இன்று வெளியிடப்பட்டது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான பாடகர் ஜிகுனா சுந்தர், இசையமைப்பாளர் சபரீஷ் சச்சிதானந்தம், பாடலாசிரியர் உடுமலை பார்த்திபன் ஆகியோர் இணைந்து “விழிகள் இல்லாத நேரம்” என்ற பாடலை இயற்றியுள்ளனர்.

இந்த பாடலின் வெளியீட்டு விழா கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகள் இணைந்து தங்கள் பாடலை லித்தி(Lithi) என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிட்டனர்.

பார்வையற்றோர் நலசங்க தலைவர் சதாசிவம் முன்னிலையில் பாடல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் காதல், கோபம், ஆத்திரம், வெறுமை ஆகியவற்றை கொண்டு பாடல்கள் இயற்ற இருப்பதாகவும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!