நிபந்தனை ஜாமீனில் பாஜக பிரமுகர் விடுதலை : காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த சூர்யா சிவா!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 1:59 pm

திருச்சி : ஜாமீனில் வெளிவந்த பாஜக பிரமுகர் திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யாசிவா இவர் பிஜேபி கட்சியில் சிறுபான்மை பிரிவின் மாநில துணைச் செயலாளராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விபத்தில் இவரது கார் சேதமடைந்ததையொட்டி விபத்து ஏற்படுத்திய ஆம்னி பஸ் உரிமையாளர் காரை ரிப்பேர் செய்து தருவதாக கூறினார்.

ஆனால் ரிப்பேர் செய்ததால் திருச்சிக்கு வந்த ஆம்னி பஸ்ஸை சூர்யாசிவா மற்றும் சிலர் ஓட்டுனருடன் பஸ்ஸை கடத்திச் சென்றனர்.

இது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர் அண்ணாமலை திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கடத்தல், மிரட்டல் பொருட்கள் அபகரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சூர்யா சிவா இன்று காலை திருச்சி கண்டோன்மொன்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். அவருடன் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் மட்டுமே வருகை தந்தனர்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!