கோவை : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 3,778 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 1,187 மனுக்கள் இருமுறை பெறப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி கடந்த 20-ந் தேதிக்கு முன் ஏற்பட்ட கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18.5.22-க்குள் தங்களது மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
This website uses cookies.