மாத மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு நிம்மதி? ₹12 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2025, 1:23 pm
2025 -2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மால சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்,. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டும், வெளிநடப்பும் செய்தனர்.
ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சிறப்பு அம்சமாக 12 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மாத வருமானம் ₹1 லட்சம் உள்ளவர்கள் வருமான வரியை செலுத்த வேண்டியதில்லை.
2023ல் ₹7 லட்சம் வரை உயர்த்தப்படட வருமான வரி உச்சவரம்பு தற்போது ₹12 லட்சம் வரை அதிகரித்து உள்ளது. இதனால் மாதம் ₹1 லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி கட்ட தேவையில்லை, இந்த அறிவிப்பின் படி 4 லட்சம் வரை வருமான வரி இல்லை.
₹4 லட்சம் வரை | இல்லை |
₹4 லட்சம் – ₹8 லட்சம் வரை | 5% |
₹8 லட்சம் – ₹12 லட்சம் வரை | 10% |
₹12 லட்சம் – ₹16 லட்சம் வரை | 15% |
₹16 லட்சம் – ₹20 லட்சம் வரை | 20% |
₹24 லட்சத்திற்கு மேல் | 30% |