கார்களை பந்தாடிய மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை : உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்…பொள்ளாச்சி அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 1:36 pm

கோவை : பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலை கவியருவி பகுதியில் நவமலை சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை மதம் பிடித்தால் பாதியின் குறுக்கே வந்த கார்களை மறித்து துவம்சம் செய்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள நவமலை மின் வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் அதே பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவரும் அவரது உறவினர்கள் இரண்டு பேரும் பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் உள்ள சரவணன் குடியிருப்பிற்கு இரண்டு கார்களில் சென்றுள்ளனர். அப்போது வால்பாதை கவியருவி பகுதியில் இருந்து நவமலை சாலைக்கு செல்லும் போது அங்க சுற்றிதிரிந்த ஒற்றை காட்டு யானை இரண்டு கார்களை மறித்து முட்டி தூக்கி வீசி சாலையில் இருந்து பள்ளத்தில் கவிழ்த்துள்ளது.

மேலும் புதரில் சிக்கிய காரை மூன்று முறை முட்டி உருட்டியது. அப்போது அங்கே ரோந்து பணியில் இருந்து வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அந்த யானை மதம் பிடித்து சுற்றியதாகவும், யானையை வனப்பகுதிக்குள் விரட்டு போது, வனத்துறையினர் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் கார் வரும் போது வனத்துறை ஊழியர்கள் கார் ஓட்டுநரை பார்த்து கைக்காட்டியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது

காரில் சிக்கியிருந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஆழியார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சரவணன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…