துள்ளி குதித்த மீன்கள் – அலேக்கா அள்ளிய மக்கள்.. 20 வருடங்களுக்கு பிறகு களைகட்டிய மீன்பிடி திருவிழா..!

Author: Vignesh
13 June 2024, 3:28 pm
fish
Quick Share

திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற மத நல்லிணக்க மீன்பிடி திருவிழாவில் ஒரு கிலோ முதல், 25 கிலோ வரையிலான ஜிலேபி, கட்லா, ரோகு, மீசைவெரா, உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்ற கிராம மக்கள்.

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடியில் அமைந்துள்ளது 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய மந்தைகுளம். இந்தக் குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஜாதி மத வேறுபாடு இன்றி மத நல்லிணக்க மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊத்தா மற்றும் வலைகளை வைத்து அரை கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஜிலேபி,கட்லா ,விரால், ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர். முன்னதாக இந்து முறைப்படி கோவில் கரையில் அமைந்துள்ள கன்னிமார் தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேகம் அதேபோல் இஸ்லாமிய சகோதரர்கள் பாத்தியா ஓதி குளக்கரையில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்து ஒன்று கூடி மீன்பிடித் திருவிழாவை துவக்கி வெள்ளைத் துண்டு விசிறி துவக்கி வைத்தனர்.

Views: - 142

0

0