தூத்துக்குடி அருகே இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து மத பிரச்சாரத்திற்கான துண்டு பிரச்சாரம் விநியோகம் செய்த கிறிஸ்த்துவர்கள் இரண்டு பேரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் விரட்டியடித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள சிவத்தையாபுரம் பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் கிறிஸ்த்துவ அமைப்பை சேர்ந்த ஒரு ஆணும்,பெண்ணும் கையில் துண்டு பிரச்சுரங்கள் வைத்து கொண்டு மதபிரச்சாரம் செய்வதற்காக அங்குள்ள மக்களிடம் வினியோகம் செய்துள்ளனர்.
இதனை கண்ட செபத்தையாபுரம் கிராம பொதுமக்கள் அவர்கள் இருவரையும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊரைவிட்டு துரத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி மேலத்தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜ் மகன் ஆசீர்வாதம் ஞானதுரை (வயது 33). இவர் மங்களகிரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று செபத்தையாபுரம் பகுதியில் பைபிள் வாசகங்கள் அடங்கிய புத்தகங்களை வீடு வீடாக கொடுத்துக் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கி உள்ளனர்.
இதில் காயம் அடைந்த ஆசிரியர் ஆசீர்வாதம் ஞானதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் அவர் சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த சுகிர்தராஜ் மகன் ஹரிஹரசுதன் (வயது 32), சிவமுருகன் மகன் ஜெய்சீலன் (வயது 52), கோபால் மகன் மாதவன் (வயது 54) BJP மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆன இவர் உட்பட 3-பேர் மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.