வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமரா பழுது.. காரணத்தை கேட்டு கடுப்பான அரசியல் கட்சிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 2:47 pm

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமரா பழுது.. காரணத்தை கேட்டு கடுப்பான அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. நீலகிரி, ஈரோடு, தென்காசி, விழுப்புரம் என, அடுத்தடுத்து மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள கட்டடத்தில், கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளின் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மொழி, மாநில, மத ரீதியாக பிரித்த காங்கிரஸ் இப்போது நிற ரீதியாக பிரிக்க முயற்சி : பாஜக குற்றச்சாட்டு!!

இங்கு 300 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ளது. காலை இடி மின்னலுடன் பெய்த மழையால் 7.30 மணிக்கு வெளியே பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஏழு சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதானது. மழை விட்ட பிறகு எட்டு முப்பது மணிக்கு மேல் கேமராக்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 531

    0

    0