மறுபடியுமா? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 1:53 pm

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க: பதவியேற்ற ஒரே நாளில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு : சுரேஷ் கோபியால் அப்செட்டில் பாஜக!

ஜூலை 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததோடு, தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி மட்டுமின்றி, தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 249

    0

    0