ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி : பதல் சொல்லாமல் நழுவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதல்வர் தேவருக்கு 3 கோடியில் மண்டபம் கட்டபடும் என அறிவித்து உள்ளார்.
சுதந்திர போராட்ட வீரராகவும் , தமிழ் மீது பற்றுகொண்டவர், விவசாயிகளின் தோழனாக விளங்கினார். சமுதாய ஒற்றுமை , பொதுவாழ்வில் நேர்மை என்று வாழ்ந்து காட்டியவர்.
தேவர் பிறக்கும்போது மாவீரராக பிறந்தார், வாழும் போதும் மாவீரர் வாழ்ந்தார், மறையும் போதும் போது மாவீரராக மறைந்தார் இப்போதும் மாவீரராக திகழ்கிறார் என கூறியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதில் கூறாமல் நழுவி சென்றார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.