நகைப் பட்டறையில் ஆய்வின் போது பணியாற்றிய வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு : நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 11:58 am

கோவை : நகை பட்டறையில் பணியாற்றி வந்த வட மாநிலத்தை சேர்ந்த எட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் அவர்களுக்கு கிடைத்த புகார் அடிப்படையில் தொழிலாளர் துறை காவல் துறை, தேசிய குழந்தை தொழிலாளர் துறை மற்றும் ரயில்வே சைல்ட் லைன் உள்ளிட்ட மாவட்ட அமலாக்க குழுவினர் கோவை பகுதியில் உள்ள நகை பட்டறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது சுக்கிரவார்பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறை சேர்ந்த எட்டு ஆண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் கோவை மாவட்ட குழந்தைகள் நல் அலுவலகம் அழைத்து வரப்பட்டனர்.

பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் இருவர் மீதும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வதோடு தொழிலாளர் துறையின் மூலம் நீதிமன்றத்தில் 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!