பணியில் சேர்ந்து ஒரே ஒரு மாதத்தில் ராஜினாமா : சொந்த ஊருக்கு ரயிலில் வந்த தீயணைப்பு படை வீரர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2022, 5:20 pm
விருதுநகர் : சாத்தூர் ரயில்வே நிலையம் அருகே தீயணைப்பு படை வீரர் ரயில்முன் பாயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் உடல் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் இருந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் சாத்தூர் அருகில் உள்ள சின்னக்காம பட்டியை சேர்ந்த ராஜேஷ் (வயது 22)என்பது தெரிய வந்தது. இவர் கடந்த மாதம் தீயணைப்பு படையில் வேலைக்குச் சேர்ந்து கரூரில் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று அவர் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு தனது சொந்த ஊருக்கு செல்ல சாத்தூருக்கு ரயிலில் வந்துள்ளார். இந்த நிலையில் தனது பேக் மற்றும் பெட்டிகளை ரயில் நிலைய பிளாட்பார்மில் வைத்துவிட்டு சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
பின்னர் அவரது பர்சில் இருந்த முகவரியை வைத்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர்
பின்பு தற்கொலை செய்து கொண்ட ராஜேஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்
மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்பு படையில் சேர்ந்து ஒரு மாத காலமே ஆன நிலையில் வேலையை ராஜினாமா செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0