திருச்சி; இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட்- லெனிஸ்ட் (விடுதலை) பொது மாநாட்டில் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள அரிஸ்டோ மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (விடுதலை)சார்பில் “இந்திய திணிப்புக்கு எதிராகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் போராட மாற்றத்திற்காக” என்ற தலைப்பில் பொது மாநாடு மாநில செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்புரையை மாநில பொதுச் செயலாளர் தீபங்கர், விடுதலை சிறுத்தை கட்சியின் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உறுப்பினர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜு ஆகியோர் வழங்கினர்.
பொதுக் கூட்ட விளக்க உரையை மத்திய கமிட்டி நிர்வாகிகள் பாலசுந்தரம்,
பாலசுப்ரமணியன் சந்திரமோகன் வாழ ஆசை தம்பி ஆகியோர் வழங்கினர்.
பொதுக் கூட்டத்தில், பாஜக ஆர் எஸ் எஸ் மதவிருப்பு அரசியலை அமலாக்க ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வர இந்திய சமூகத்தில் பண்பாட்டுத்தன்மையை கூட்டாட்சி தன்மையை சர்வாதிகாரத்தில் முயற்சிக்கிறது. இதனை முறியடிப்போம் மாநில உரிமையை மீட்போம் ஒற்றை ஆட்சிக்கு எதிராக கூட்டாட்சி முறைக்காக போராடுவோம்.
ஆளுநர் வழியாக தமிழ்நாட்டில் இணையான அரசியல் அதிகாரத்தை செலுத்த முயற்சிக்கும் பாஜக அரசே கண்டிப்பதுடன் ஆர்எஸ்எஸின் சித்தாந்தங்களை பரப்புரை செய்யும் ஆளுநர் பதவி விலக வேண்டும். தொழிலாளர்கள் போராடி பெற்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் நான்கு சட்ட தொகுப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை மற்றும் அரசு சார் நிறுவனங்கள் உள்ள வேலை வாய்ப்புகளில் முழுமையாக தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் ஞான தேசிகன் மாநில குழு உறுப்பினர் சிம்சன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.