தமிழகத்தில் ஓய்ந்த பிரச்சாரம்.. என்னென்ன கட்டுப்பாடுகள்? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 7:59 pm

தமிழகத்தில் ஓய்ந்த பிரச்சாரம்.. என்னென்ன கட்டுப்பாடுகள்? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!!

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வடைந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

அவர் கூறியதாவது : தமிழகத்தில் பிரசாரம் ஒய்ந்த நிலையில் யாரும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. துண்டு பிரசுரம் மற்றும் கட்சிகொடி இல்லாமல் தனித்தனியாக வீடுவீடாக சென்று பிரசாரம் செய்வது சட்டப்படி குற்றம்.

ஒட்டுக்கு பணம் வாங்குவதும் குற்றம் தருவதும் குற்றம், அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர். மாலை 6 மணிக்குள் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படும். தேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வவொரு குடிமகனும் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையையும் பொறுப்பையும் கையில் எடுங்கள்.

அடுத்த 5 ஆண்டுக்கு நாட்டை யார் வழி நடத்துவார் என்பதை நிர்ணயிக்கும் அடிப்படையான உரிமையைபொறுப்பை கையில் எடுங்கள். ஜனநாயக செயல்முறைகான சக்தியைவீண் போக விடாதீர்கள்.

எதிர்காலத்தை கட்டமைக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள். என்றார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 76 பெண்கள் உட்பட 950 வேட்பாளர்கள் கலத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில் 19 சுயேட்சைகள் உட்பட 26 பேர் களத்தில் உள்ளனர். வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் நாளை அனுப்பப்பட உள்ளன. பாதுகாப்பு படையினர் தேவையான இடங்களுக்கு நாளை அனுப்பப்படுவர் என அவர் கூறினார்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!