ஓபிஎஸ் சகோதரர் மீது ஓய்வு பெற்ற மருத்துவர் பரபரப்பு புகார் : கட்டுமானப் பணிகளை செய்ய அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
20 September 2022, 9:16 pm

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மீது ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம். இவர் பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் பெரியகுளத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, இடத்தை சுற்றி குழி தோண்டியதால், அருகே இருந்த ஓய்வு பெற்ற மருத்துவர் திருமலை வீட்டின் அடித்தளம் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த அடித்தளத்தை சரிசெய்வதற்காக பணியாட்களை மருத்துவர் அனுப்பியுள்ளார். ஆனால், அவர்களை, தன்னுடை இடத்தின் வழியாக செல்ல ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரம் அனுமதிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் சகோதரருக்கும், மருத்துவர் திருமலை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டட பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் ஓபிஎஸ் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தென்கரை காவல் நிலையத்தில் மருத்துவர் திருமலை புகார் அளித்துள்ளார். இந்த புகாரை மறுத்த சண்முக சுந்தரம், தன்னுடைய இடத்தை அபகரிக்கும் நோக்கில் மருத்துவர் திருமலை செயல்படுவதாக, தானும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!