சிறுமியை வைத்து பாலியல் தொழில்… ஓய்வு பெற்ற எஸ்.ஐ கைது : விசாரணை வளையத்தில் சிக்கிய 9 பேர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 9:57 am

கரூர் அருகே சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் கைது எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலமாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது.

இந்த புகார் குறித்து குழந்தைகள் நல அலுவலர், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அந்த தகவலின் பெயரில் 18-தேதி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பெயரில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் மூன்று பெண் புரோக்கர் மற்றும் ஐந்து இளைஞர்கள் உட்பட எட்டு பேரை கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அன்று காலை முதல் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

தொடர்ந்து கரூர் காவல் நிலையத்திற்கு அன்று வந்த எஸ்.பி சுந்தரவதனம் விசாரணையை தீவிர படுத்த உத்தரவிட்டு சென்றார்.

விசாரணைக்கு பின்னர் சாந்தி (வயது 42), மேகலா (வயது 42), மாயா (வயது 45) ஆகிய மூன்று பெண் புரோக்கர்கள் மற்றும் கார்த்தி (வயது 28), கார்த்திகேயன்(வயது 27), சந்தோஷ் (வயது 30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (வயது 27), கௌதம் (வயது 30) உள்ளிட்ட 8 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கடந்த 18ஆம் தேதி இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து தனிப்படை தீவிர விசாரணை ஈடுபட்டு வந்த நிலையில் இன்று சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மோகன் (வயது 61) என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது.

பாலியல் தொழில் செய்த விவகாரத்திற்கு உடந்தையாக இருந்த காவல் துறை அதிகாரியை தாமதமாக நேற்று காவல்துறை கைது செய்தது .

மேலும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரம் தொடர்பாக இதுவரை 9 நபர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் சிலர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?