மீண்டும் இணையும் 2000ம் ஆண்டு வெளியான BLOCK BUSTER படத்தின் கூட்டணி : 22 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவுக்கு வரும் குல்ஃபி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2022, 2:04 pm

தமிழ் சினிமாவில் கள்ளழகர் படத்தின் மூலமாக அறிமுகமானாலும், முதலில் அவருக்கு வெளியான படம் முதல்வன். விஜயகாந்தின் நாயகியாக அறிமுகமான லைலா, அந்த படம் வெளியாவதற்கு முன் அவர் நடித்த முதல்வன் படம் திரைக்கு வந்தது.

Laila - IMDb

வந்த வேகத்தில் ரசிகர்களின் மனதை தனது வசீகர சிரிப்பால் கொள்ளையடித்தார். பின்னர் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சீக்கிரம் பிரபலமடைந்தார்.

Laila Actress, Age, Biography, Wiki, Movies, Career, Family

அதன்பிறகு லைலா கடந்த 2006ஆம் ஆண்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

Dance Jodi Dance Juniors judge Laila wishes hubby Mehdin on wedding  anniversary with a cute post - Times of India

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் திரையில் நடிக்க உள்ளார். தற்போது சின்னத்திரையிலும், ஒரு சில சீரியல்களில் தலையை காட்டி வரும் அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு தனது ஆஸ்தான நடிகர் பிரசாந்த்தை சந்தித்துள்ளார்.

Watch Parthen Rasithen | Prime Video

இவர்கள் நடிப்பில் 2000ஆம் ஆண்டில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் படம் பயங்கர ஹிட் ஆனது. தற்போது பிரசாந்த் ஹிந்தி ரீமேக்கான அந்தாதூன் படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடித்து வருகிறார்.

Facebook

இந்த படம் முடிவடைந்ததும், லைலாவுடன் ஜோடியாக பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிரசாந்த் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துள்ளது கேலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leading Telco providing Cable TV, Internet, VoIP, OTT ans VAS

அதற்கேற்றார்போல் வெள்ளித்திரையிலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் மற்றும் லைலா இருவரும் ஜோடியாக நடிப்பதால் ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என பலரும் கூறுகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1215

    0

    0